நண்டு பிரியாணி

0
241

தேவையானவை:
பெரிய சைஸ் நண்டு – 5
பாஸ்மதி அரிசி – இரண்டரை கப்
பெரிய வெங்காயம் – 3
நாட்டுத் தக்காளி – 3
பச்சை மிளகாய் – 5
பட்டை,லவங்கம் – தலா 2
ஏலக்காய் – 4
புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி
இஞ்சி – 2 துண்டு
முழுப்பூண்டு – 3
தயிர் – அரை கப்
தனி மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்
நெய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளுங்கள்.நண்டை சுத்தம் செய்து, நன்கு கழுவி, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவையுங்கள். வெந்ததும் எடுத்து, ஆறியதும் ஓடுகளை உடைத்து, சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

கொடுத்திருக்கும் பொருட்களில், தக்காளி முதல் மிளகாய்தூள் வரை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி சாறாக எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சாறு ரொம்பத் தண்ணீராக இருக்கக்கூடாது. கெட்டியாக இருக்கவேண்டும். அதனால், வடிகட்டிய சக்கையில் மணம், காரம் இருக்கும்வரை, கடைசிச் சக்கை வரை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துச் சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சாறை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றிக் காயவைத்து, வெங்காயத்தை பொன் வறுவலாக வதக்கி, அத்துடன் அரைத்து வைத்திருக்கும் சாறைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, கெட்டியான தொக்கு பதம் வரும்வரை கிளறுங்கள். கெட்டியாகி, எண்ணெய் கசிந்து வரும்போது, வேகவைத்த நண்டு இறைச்சியைச் சேர்த்துக் கிளறி, அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து விடுங்கள்.
இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அரிசி, உப்பு போட்டு அரை வேக்காடாக இருக்கும்போது வடித்துக்கொள்ளுங்கள். அந்த சாதத்தை, ஏற்கெனவே தயாராக இருக்கும் நண்டு மசாலா தொக்கில் தூக்கிக் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள். நண்டு சாப்பிடாதவர்களைக் கூட இந்த பிரியாணி சாப்பிடவைக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY