மசாலா தோசை

0
134

தேவையானவை:

தோசை மாவு – இரண்டு கப்

உருளைக்கிழங்கு – கால் கிலோ

நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 3 பல்

நறுக்கிய பச்சை மிளகாய் – 4

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

காரச்சட்னி – சிறிதளவு

எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன், பொட்டுக்கடலை மாவு தூவி, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். மசாலா ரெடி!

தோசைக் கல் சூடானதும், எண்ணெய் விட்டு, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, பாதி வெந்ததும் ஒரு பாதியில் காரச்சட்னி தடவி… மறு பாதியில் கிழங்கு மசாலா வைத்து, நெய் விட்டு மடிக்கவும். அதே போல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்யவும்.

இந்த தோசையை சூடான சாம்பாருடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY