விக்ரமின் இருமுகன் ஜூலையில் ரிலீஸ்?

0
103

ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து உருவாகிவரும் படம் இருமுகன். நயன்தாரா, நித்யாமேனன் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி, இருமுகன் படத்திற்கான டீஸர் வெளியாகி, இணையத்தில் வைரலடித்தது.

இருமுகன் படத்தை ஜூலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விக்ரமின் ஒரு வேடத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, மற்றொரு வேடத்திற்கான படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள். 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், மீதமுள்ள படப்பிடிப்பிற்கு லடாக் மற்றும் பாங்காக் செல்லவிருக்கிறதாம்.

மற்றொரு வேடத்தில் விக்ரம் திருநங்கையாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் பரவிவருகின்றன. எனவே, திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடைந்தால், ஜூலையில் இருமுகன் படத்தை திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY