மைசூர் மசாலா தோசை

0
139

தேவையானவை

வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய்- 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது),
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை

அடுப்பில் எண்ணெய் காயவைத்து கடுகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும்.  கடைசியில் சிறிது சிறியதாக நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கீழே இறக்கி கொத்தமல்லி, சிறிதளவு  எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

பரிமாறும் விதம்?

தோசை வார்த்தபின் இந்த மசாலாவை நடுவில் வைத்து சுருட்டிப் பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY