பீட்சா தோசை

0
211

தேவையானவை:

இட்லி மாவு – 2 கப்

நறுக்கிய வெங்காயம்

குடமிளகாய், தக்காளி – தலா ஒன்று

பச்சை மிளகாய் – 2

சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி கெட்சப் – ஒரு டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

பூண்டு – 2 பல்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி… தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் சேர்த்து இறக்கவும்.

தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, சற்று தடிமனாக மாவை வார்த்து மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து.. தோசை மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய காய்கறியைப் பரப்பி, கடைசியாக வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் ஆகியவற்றைத் தூவி, வாசனை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY