மாதவனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

0
106

மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் வெற்றிநடை போட்டு வருகிறது. தமிழ், இந்தி என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படம், இந்தியைவிட தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து மாதவனுக்கும் தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது ‘ஓரம்போ’, ‘வ குவார்ட்டர் கட்டிங்’ படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியர் மாதவனை வைத்து படம் இயக்கவிருக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கிய கதையம்சம் கொண்டுள்ளதால், இப்படத்தில் இன்னொரு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் தற்போது விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கும் விஜய் சேதுபதி, படத்தின் கதை மிகவும் நன்றாக இருந்ததால், இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY