வெளிநாடுகளில் திரையிட ரூ.30 கோடிக்கு விற்பனையானதா கபாலி?

0
94

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இப்படத்தின் வெளிநாட்டின் உரிமை இவ்வளவு தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக வெளியான செய்தி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் முகத்தில் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் டீசர், டிரைலரை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY