கன்னடப் படத்தில் சுதீப் ஜோடியாகும் அமலா பால்

0
175

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட அமலா பால் மீண்டும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளார்.

இந்த வருட தொடக்கத்தில் அம்மா கணக்கு படத்தில் நடித்தவர் தற்போது ஜெய்சூர்யாவுடன் மலையாளப் படமொன்றில் நடித்து வருகிறார்.

இதையடுத்து கன்னடத்தில் சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக அவர் நடிக்க உள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்துள்ள அமலா பால் இதுவரை கன்னட படத்தில் நடித்ததில்லை. அவரது முதல் கன்னடப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY