மலேசியாவில் நயன்தாராவிடம் விசாரணை

0
271

விக்ரம்–நயன்தாரா, நித்யாமேனன் நடிக்கும் படம் ‘இருமுகன்’. இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா கடந்த மாதம் மலேசியா சென்றார். அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு முடிந்ததால் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தார். இதற்காக மலேசிய தலை நகர் கோலாம்பூரில் உள்ள பட்ஜெட் விமான நிலையத்தில் இருந்து கொச்சி செல்லும் விமானத்துக்கு முன்பதிவு செய்து இருந்தார்.

அந்த விமான நிலையத்தில் அதிகாரிகள் நயன்தாரா மற்றும் அவருடன் புறப்பட்ட உதவியாளர்கள் பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தனர்.அதில் படப்பிடிப்புக்காக பதியப்படும் ‘ஒர்க் பெர்மிட்’ முத்திரை இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நயன்தாராவிடம் சிறிது நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை இந்தியா திரும்ப அனுமதித்தனர்.இந்த விசாரணை நடந்த போது எடுத்த படத்தை விமான நிலைய ஊழியர் ஒருவர் ‘பேஸ்புக்’ மூலம் வெளியிட்டார்.

இந்த நிலையில் நயன்தாரா பற்றி பல்வேறு தகவல்கள் இணைய தளத்தில் உலா வந்தன. ‘வாட்ஸ்அப்’ மூலம் அது வேகமாக பரவியது.இதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மலேசியாவின் இரண்டு பன்னாட்டு முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை.

இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் ‘கே.எல்–1 முனையம் மூலம் பயணம் செய்வார்கள். ஆனால் ‘கே.எல்–2’ முனையம் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ மூலம் இயங்குகிறது. இங்கு குடியேற்ற அதிகாரிகள் நயன்தாரா மற்றும் உதவியாளர்களிடம் பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரை பதிவு தொடர்பான சில விளக்கங்களை கேட்டனர்.

அப்போது நயன்தாராவே அதிகாரிகளுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகள் கண்டார். அவரும் அவரது உதவியாளர்களும் எந்தவித இடையூறும் இல்லாமல் இந்தியா திரும்பினார்கள்.இந்த நிலையில் நயன்தாரா பாஸ்போர்ட் நகல் அந்த நாட்டு இணைய தளங்களில் வெளியானது குறித்து மலேசிய காவல்துறையிடம் இருமுகன் படக்குழுவினர் புகார் அளித்துள்ளனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

பாஸ்போர்ட் நகல் வெளியானது மற்றும் நயன்தாராவிடம் விசாரணை நடந்தது பற்றிய படம் வெளியானது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த படத்தை வெளியிட்ட விமான நிலைய ஊழியர் ஒருவரை சஸ்பெண்டு செய்து இருப்பதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY