ரஜினியுடன் நடிப்பது கவுரவம்

0
273

ரஜினியுடன் நடிப்பது கவுரவம்: ஏமி ஜாக்சன் நெகிழ்ச்சி

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘2.ஓ’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படப்பிடிப்பில் ரஜினி மற்றும் இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ள அக்சய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். ஏமி ஜாக்சனும் இந்த படத்தில் நடிக்கிறார்.

நேற்று இரவு ஏமி ஜாக்சன் ரஜினியுடன் தான் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் “ வேறு புகைப்படங்களில் நான் இந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் இருந்தது இல்லை.ரஜினி சாருடன் இணைந்து நடிப்பது மிகப் பெரிய கவுரவம் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  

NO COMMENTS

LEAVE A REPLY