என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?

  0
  111

  நாம் பெரும்பாலும் இளமையாக இருக்க மருத்துவரை நாடி செல்கிறோமே தவிர இயற்கை உணவு பொருட்களை எடுப்பதில்லை. காரணம் நாம் வாழும் சூழ்நிலையில் நமக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை.

  இதோ ஒரு ஈஸி டிப்ஸ்……என்றும்  இளமையாக இருக்க ஓர் எளிய வழி இருக்கு….என்னடானு தானே யோசிக்கிறீங்க, எல்லாம் நம்ம பாட்டி வைத்தியம் தாங்க.

  காலையில் இஞ்சி, மாலையில் கடுக்காய், மத்தியம் சுக்கு இவைகளை பக்குவப்படுத்தி கற்பமுறைப்படி உண்டு வந்தால் நோய் நம்மை கண்டு அஞ்சி போய்விடுமாம்.  காலையில் இஞ்சியை தேநீர் அல்லது சட்டினியில் சேர்த்தோ அல்லது தேனும் இஞ்சியும் சேர்த்தோ சாப்பிடுவது. மதிய உணவுக்குப்பின் சுக்கும் கருப்புக் கட்டியும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவை இரண்டையும் நாம் இடையிடையே உபயோகிப்பது தான். ஆனால் தினசரி உரிய நேரத்தில் எடுக்க வேண்டும். இரவில் கடுக்காய்ச் சூரணம் எடுக்க வேண்டும்.

  இரவு படுக்கும் முன் ஒரு தேக்கரண்டி கடுக்காய் தூளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். கடுக்காய் மலத்தை இளக்குவதோடு உடல் இறுக்கத்தையும் கொடுக்கும். இது செலவில்லாத எளிய மருத்துவம். மருத்துவமனைக்கும் போக வேண்டிய அவசியமில்லை. உடலில் எற்படும் சிறுசிறு நோய்கள் குணமாகிவிடும். சளித் தொந்தரவு இருக்காது. உடல் எடை குறையும், சக்தி கூடும், இளமை திரும்பும், மனம் அமைதி பெறும்.

  தினமும் மூன்று வேலையும் சாபிட்ட பிறகு வெந்நீர் அருந்த வேண்டும்.அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.

  NO COMMENTS

  LEAVE A REPLY