கொத்தமல்லி சாதம்

0
160

தேவையானவை

வடித்த சாதம் – 1 கப்,
கொத்தமல்லி – 2 கப்,
புளி – எலுமிச்சை அளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – சிறிது,
நெய் – சிறிது.

வறுத்தரைக்க:

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3,
பெருங்காயம் – சிறிது.

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், அதில் புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். சூடான சாதத்தில் அரைத்த விழுதுடன், சிறிது நெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு கொத்தமல்லி சாதம் சாப்பிடலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY