முட்டை ரொட்டி

0
139

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு (மைதா மாவு) – 500 கிராம்

உப்பு – தேவையானளவு

பால் – ஒரு மேசைக்கரண்டி
பட்டர் – ஒரு மேசைக்கரண்டி
கொதிநீர் – (1- 2) கப்
எண்ணெய் – தேவையான அளவு
முட்டை – 5
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பால், பட்டர் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். அதன் பின்பு கலந்தவற்றுடன் கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். அதன் பின்னர் குழைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அதன் பின்னர் ஒரு பலகையில் சிறிதளவு கோதுமை மாவு(மைதாமாவு) வை எடுத்து எல்லா இடமும் தூவவும்.

அதன் பின்னர் செய்து வைத்துள்ள சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து மாவு தூவிய பலகையின் நடுப்பக்கத்தில் வைக்கவும். வைத்த பின்னர் அதன் மேல் ஒரு உருளையை வைக்கவும். அதன் பின்னர் அந்த உருளையினால் மெதுவாக அமர்த்தவும்(எல்லாப்பக்கமும் ஒரேயளவு தடிப்பு வருமாறு) பின்னர் அந்த மாவை வட்டமாக தட்டவும். வட்டமாக தட்டிய பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். தோசைக்கல் சூடானதும் அதில் கொஞ் சமாக எண்ணெய் தடவவும். பின்பு வட்டமாக தட்டிய மாவினை சூடான தோசைக்கல்லின் மேல் போடவும். போட்ட பின்னர் அந்த மாவின் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும் அதன் பின்னர் விரும்பினாள் அதன் மேல் மிளகுத்தூள் போடலாம் இவையாவற்றையும் செய்த பின்னர் வேக விடவும். அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இருப்பக்கமும் வெந்ததும் சுவையான சத்தான சுத்தமான முட்டை ரொட்டி தயராகி விடும். வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும். ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும். பால் பட்டர், முட்டை ஆகியவற்றை சேர்த்து செய்த ரொட்டி மென்மையாக இருக்கும்.

சுத்தமானதும் கல்சியம்,புரதம், கார்போவைதரேட்,மினரல், உயிர்சத்துகள் போன்ற பற்பல சத்துக்கள் நிறைந்ததும் சுவை யானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடியதுமான ஒர் உணவே முட்டை ரொட்டி ஆகும்.

NO COMMENTS

LEAVE A REPLY