செட்டிநாட்டு பலகாரம் – கந்தரப்பம்

0
257

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 உழக்கு

புழுங்கல் அரிசி – 1 உழக்கு

உளுந்து – 2 கைப்பிடி

வெந்தயம் -3/4 tbsp

வெல்லம் -5-6 அச்சு

ஏலக்காய் -சிறிதளவு

செய்முறை:

அரிசியை உழக்கில் தலைதட்டி அளந்து கொண்டு அதன் மேல் உளுந்தை கோபுரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இரண்டுவகையான அரிசியையும் உளுந்துடன் அளந்து எடுத்துக் கொண்டு,வெந்தயத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.நன்கு ஊறியபின் கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அதனுடன் வெல்லத்தையும்,ஏலக்காயையும் பொடித்து போட்டு மையாக அரைத்தெடுக்கவும்.

தோசை மாவுப்பதத்திற்கு கரைத்துக் கொண்டு,இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்க வேண்டியது தான்.அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு,ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து ஊற்றினால்,சிறிது நேரத்தில் அழகாக மேலே எழும்பி வரும்.அப்படி வந்ததும் கந்தரப்பத்தை திருப்பி விட்டு சிறிது நேரத்தில் எடுத்து விடலாம்.பஞ்சு பஞ்சாக சுவையுடனும்,மணத்துடனும் மிக அருமையாக இருக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY