கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

    0
    197

    சுவாமி : பாணபுரீஸ்வரர்.

     

    தல வரலாறு:

    ஊழிக்காலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது பிரம்மனால் விடப்பட்ட அமுதகுடம் மிதந்து வந்துகொண்டிருந்தது. அப்போது கயிலையில் இருந்து வேட வடிவத்தில் வந்த சிவபெருமான் ஒரு பாணத்தால் அந்தகுடத்தை உடைத்தார். சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால் பாணாத்துறை எனப்பட்டது. இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் உருவானது. இதன்பிறகே குடத்திலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது. எனவே இத்தலத்து இறைவனை வணங்குபவர்களுக்கு ஆயுள் அபிவிருத்தியும், அழியாத புகழும் கிட்டும் என்பது நம்பிக்கை. அமுதத்தையே குடித்த மகிமை இத்தலத்திற்கு வந்தால் கிடைத்துவிடும்.

    உலகின் முதல் வழிபாடு சிவவழிபாடு ஆகும்.  மனிதனின் உடலில் ஜீவனாக (சிவமாக) இருப்பவர் சிவபெருமான்.   ஆண்டுதோறும் மாசி மாதம் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.  ஆண்டுதோறும்  மகாசிவராத்திரி விழாவையொட்டி மாலை 4.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெறும்.   அப்போது 16 வகையான திரவியங்களால் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.   அப்பொழுது சிவலாயம் சென்று சிவனை வழிபட்டால் ஒரு ஆண்டு சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலனை பெறலாம்  என்பது நம்பிக்கை.  மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு 4 கால பூஜையின் போது சுவாமி தரிசனம் செய்தால் வாழ்வில்  தொல்லைகள் நீங்கி நிம்மதியான மனத்தையும், நோயற்ற வாழ்வையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்த தலமே பாணபுரீஸ்வரர் கோயில். பாணாத்துறை என்ற இடத்தில் இத்தலம் உள்ளது.

    சிறப்பம்சம்:

    வியாச முனிவர் ஒருமுறை நந்திதேவரிடம் சாபம் ஒன்றை பெற்றார். மகாவிஷ்ணவின் கட்டளைப்படி பாணபுரீஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கியது. இத்தலத்தில் வியாசர் லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார். இதற்கு வியாசலிங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க தேசத்து அரசனான சூரசேன மன்னன் தன் மனைவி காந்திமதியின் தீராத நோயை போக்குவதற்காக சூதமகா முனிவரின் கட்டளைப்படி இத்தலத் திற்கு வந்து தங்கி திருப்பணி செய்து மகப்பேறும் பெற்றான். இங்கிருக்கும் சோமகலாம்பாளை வழிபட் டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் முகப்பொலிவையும் இந்த அம்பிகை தருவாள்.

    விழாக்கள்:

    சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் சிவன், அம்பாளுக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் உண்டு. மகாமகத்தன்று இறைவன் இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வார்.

    இருப்பிடம்: கும்பகோணம் நகரத்தின் எல்லையில் உள்ள பாணாத்துறையில் பாணபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

    நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

    அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

    கோவில் முகவரி : அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில்,

    கோவிந்தபுரம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

    அருகில் உள்ள தங்கும் இடம் :

    1. சிவமுருகன் ஹோட்டல்,

    60 பீட் மெயின் ரோடு,

    நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

    கும்பகோணம் – 612 001,

    Ph : 096000 00384.

     

    2.சாரா ரீஜன்ஸி,

    45/1 சென்னை ரோடு,

    கும்பகோணம் – 612002,

    Ph : 082200 05555.

     

    3.குவாலிட்டி இன்,

    வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

    கும்பகோணம்,

    தஞ்சாவூர் – 612 001,

    Ph : 0435 255 5555,

     

    4.ஹோட்டல் கிரீன் பார்க்,

    எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

    கும்பகோணம் – 612 001,

    Ph : (0435) – 2402853 / 2403914.
    5.ஹோட்டல் வினாயகா – கும்பகோணம் 132C,

    காமராஜ் ரோடு, கும்பகோணம் – 612 001,

    Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

     

    அருகில் உள்ள உணவகங்கள் :

    1. வெங்கட்ரமணா உணவகம்,

    No 40, TSR பெரிய வீதி,

    கும்பகோணம் – 612001,

    அருகில் காந்தி பார்க்,

    Ph : +(91)-9442130736.

     

    2. ஸ்ரீ பாலாஜி பவன்,

    1, சாஸ்திர காலேஜ் ரோடு,

    கும்பகோணம் – 612001

    Ph : +(91)-435-2424578.

     

    3. ஹோட்டல் சண்முக பவன்,

    16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

    கும்பகோணம் – 612001.

    Ph : +(91)-435-2433962.

     

    4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

    No 47, ஜான் செல்வராஜ் நகர்,

    கும்பகோணம், 612001

    Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

     

    5. ரயாஸ் கார்டன் உணவகம்,

    No 18 ரயாஸ் ஹோட்டல்,

    தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

    கும்பகோணம் , 612 001.

    Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

    NO COMMENTS

    LEAVE A REPLY