கோதுமை நூட்லஸ்

0
144

 தேவையானவை

வறுத்த கோதுமை மாவு – 2 டம்ளர்

தண்ணீர் அளவு – 2 1/2 டம்ளர்

காய்கறிகள் – 50 கிராம்( கேரட் , பீட்ரூட் , பட்டாணி, உருளை கிழங்கு ..)

பெரிய வெங்காயம் – 2

தக்காளி         – 1

பச்சை மிளகாய் -4/குடைமிளகாய்

மிளகாய் தூள் – 1டீஸ்பூன் (10கிராம்)

மஞ்சள்  தூள் – 1/4 டீஸ்பூன்

கரி மசாலா-1டீஸ்பூன்

புதினா , மல்லி தழை – 10 கிராம்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

 ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்காமல் வெதுவெதுப்பாக சுட வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு, உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். (மாவு கையில் ஒட்ட கூடாது)சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும் .

சிறிதளவு என்னை சேர்க்கவும் இப்போது இடியாப்ப அச்சி இல்லாம கொஞ்சம் பெரிய அச்சில் எடுத்து இட்லி பானையில் பிழியவும்.வெந்தவுடன் குளிரிந்த நிரினால் அலசவும்.

பிறகு எண்ணெய் விட்டு குடைமிளகாய் ,கரி மசாலா ,தக்காளி ,காய்கறிகள்( கேரட் , பீட்ரூட் , பட்டாணி, உருளை கிழங்கு ..)மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் கடைசியாக வேக வைத்தா  கோதுமை சேர்க்கவும்.

புதினா , மல்லி தழை போட்டு இருக்கவும்.இப்போது சுவையான கோதுமை நூட்லஸ் ரெடி .

NO COMMENTS

LEAVE A REPLY