ஹன்சிகாவின் ஆசை

0
201

ஹன்சிகாவை பொறுத்தவரை தமிழில் அவர் நடித்த ‘உயிரே உயிரே’ படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து ‘மனிதன்’, ‘போகன்’ என 2 படங்களில் நடித்து வருகிறார். டோலிவுட் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. புதிய படங்களை ஏற்பதற்காக ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார்.

நடிகை ஆகாமலிருந்தால் டாக்டராக ஆகி இருப்பேன் என்று அவர் கூறுவதுண்டு. அவரது தாயார் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடிக்கடி நியூயார்க் டூர் கிளம்பி விடுவதும் அங்கேயே சுமார் 1 மாதம் தங்குவதும் ஹன்சிகாவுக்கு பிடிக்கும். நியூயார்க் மீது அவர் கொண்டிருக்கும் காதல்தான் அவரது இந்த பயணத்துக்கு காரணமாம். சமீபத்தில் தனது விருப்பம்பற்றி பேட்டி அளித்த ஹன்சிகா, ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது,’100 வயது வரை வாழ்வேன் என்பதில் நம்பிக்கை உண்டு. உறங்கும்போதே நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதுதான் ஆசை’ என குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY