நயன்தாராவை மடக்கிய சிவகார்த்திகேயன்!

0
162

கிசுகிசு ராணியாக வலம் வந்தாலும், அதெல்லாம் கேரியரை பாதிக்காதவாறு நடந்து கொள்வதில் நயன்தாராவுக்கு நிகர் அவரேதான். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நம்பர் ஒன் பொசிஷனை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி தென்னிந்தியாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக இருப்பவர், தமிழின் மோஸ்ட் வான்டட் இளம் ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மட்டும் ஜோடி சேராமல் இருந்தால் எப்படி?

‘ரஜினிமுருகன்’ ஹிட்டுக்குப் பிறகே நயனுடன் ஜோடி சேர சிவா ஆவலாக இருந்தார். ஆனால் கால்ஷீட் ஒத்துவராததால் (சம்பளமும் கட்டுப்படி ஆகாததால்) ‘ரெமோ’ படத்தில் நயன் நடிக்க முடியாததால், மீண்டும் கீர்த்திசுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயின் ஆனார்.

ஆனால், பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு நயன்தாரா ஹீரோயினாக நடித்தால்தான் சரிவரும் என்று மோகன்ராஜா கருதியிருக்கிறார். தமிழில் தனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்திருக்கும் இயக்குநர் என்பதால், நயன்தாரா மற்ற எல்லா விஷயங்களையும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே, சிவகார்த்திகேயனோடு நயன்தாரா ஜோடி சேர்வது உறுதியாகி விட்டது.

நயன்தாராவுக்கு 3 கோடி சம்பளம்.

NO COMMENTS

LEAVE A REPLY