வேர்கடலை சட்னி

0
2076

தேவையானவை

வேர்கடலை – ஒரு கோப்பை
துருவிய தேங்காய் – அரைக்கோப்பை
புளி – கொட்டைப்பாக்களவு
பூண்டு – இரண்டு பற்கள்
காய்ந்தமிளகாய் – ஆறு
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
உப்புத்தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – இரண்டு

செய்முறை 

வேர்கடலையை சிவக்க வறுத்து ஆற வைத்து அதன் தோலை நீக்கிவிடவும்.
வேர்கடலையை வறுக்கும் பொழுதே காய்ந்தமிளகாயையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பிறகு அரவை இயந்திரத்தில் முதலில் தேங்காய், காய்ந்தமிளகாய், புளி, பூண்டு, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிறிது நீரைச் சேர்த்து அரைக்கவும்.
பிறகு கடலையை கொட்டி மேலும் சிறிது நீரைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு தேவையான பதத்திற்கு நீரை ஊற்றி கலக்கிக் கொள்ளவும். சற்று கெட்டியாக இருந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியின் மீது கொட்டவும்.

இந்த சுவையான வேர்கடலை சட்னி இட்லி, தோசைக்கு ஏற்ற பக்க உணவு.

NO COMMENTS

LEAVE A REPLY