மசாலா சப்பாத்தி

0
122

தேவையானவை

உருளைக்கிழங்கு – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேகரண்டி
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
கறி மசாலா பொடி,மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லித் தழை,முட்டைகோஸ் – சிறிது,
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
பட்டை – சிறுதுண்டு
கிராம்பு – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

சப்பாத்தி-4

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு, சீரகம், சோம்பு போட்டு அதனுடன் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள்,கறி மசாலா பொடி,வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்து வதக்கவும். சப்பாத்தியுடன் பன்னீர் அல்லது நெய்யில் வறுத்த பிரட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.( விருப்பபட்டால் பட்டாணி ,பீன்ஸ்,காரட்  சேர்த்துக்கலாம்).

NO COMMENTS

LEAVE A REPLY