பெப்பர் பீஸ் மசாலா!

0
109

தேவையானவை:

பட்டாணி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 3,

தக்காளி – 4, இஞ்சி,

பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன்,

மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன்,

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,

கறிவேப்பிலை – கைப்பிடியளவு,

உப்பு – சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க:

மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். மிளகு , சீரகம், சோம்பு ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!

NO COMMENTS

LEAVE A REPLY