நடிகர் சூர்யாவின் “யாதும்’ இதழ் “

0
158

யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழ் ஒன்றைத் தொடங்க உள்ளார் நடிகர் சூர்யா.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மதிப்புக்குரியவர்களுக்கு, ‘யாதும் ஊரேவின்’ பசுமை வணக்கங்கள்…

மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை, ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்துள்ளது. தன்னெழுச்சியாக ஏராளமான தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள். அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில், அகரம் ஃபவுண்டேசன் உருவாக்கிய ‘யாதும் ஊரே’ திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அமைப்பின் மூலம், சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள அனைவரும் இணைந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவேண்டும். அதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருகின்றன.

‘யாதும்’ இதழின் முதல் பிரதியை, வரும் 28 ஏப்ரல் 2016 அன்று வெளியிடுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத இதழின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் ஏப்ரல் 28 அன்று மாலை 6 மணிக்கு ஜேஎஸ் அரங்கில் நடைபெற உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY