ஐயங்கார் எள் சாதம்

0
321

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
எள் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும்.
  • எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். (சிறிதளவு உப்பு மட்டும்- அரைபடுவதற்காக)
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • உதிராக வடித்த சாதத்தில் தாளித்ததைக் கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலக்கவும்.

குறிப்பு

*விரும்பினால் ஒரு டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கலாம். சுவையாக இருக்கும். (நான் சேர்த்திருக்கிறேன்.)
* காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகும், எண்ணைக்குப் பதில் நெய்யும் உபயோகிக்கலாம்.
* கருப்பு எள் உபயோகித்தால் சாதம் நிறம் கருப்பாக இருந்தாலும் அதிக மணமாக இருக்கும். (நான் வெள்ளை எள் உபயோகித்திருக்கிறேன்.)

 

NO COMMENTS

LEAVE A REPLY