கார்ன் குடைமிளகாய் கிரேவி

0
174

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் – 1 கப் (வேக வைத்தது)

குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பிரஷ் க்ரீம் – 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

பூண்டு – 5 பற்கள்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் ஸ்வீட் கார்னை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.

பின் தனியாக ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,குடைமிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள மசாலாவில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, பிரஷ் க்ரீம் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதில் தக்காளி சாஸ் மற்றும் வேக வைத்த ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி இறக்கினால், கார்ன் குடைமிளகாய் கிரேவி ரெடி!!!
Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/corn-capsicum-gravy-010718.html

NO COMMENTS

LEAVE A REPLY