இனிப்பு அப்பம்

0
141

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்,

துவரம்பருப்பு,

வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – கால் கப்,

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

வெல்லம் – அரை கப்,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பச்சரிசி, வெந்தயம், துவரம்பருப்பை ஒரு மணி நேரம், ஊற வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

நன்றாக அரைப்பட்டதும் அதில் வெல்லக் கரைசலை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும். இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் மாவை ஊற்றி, அப்பங்களாகச் சுட்டெடுக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY