தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில்!

  0
  252

  926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில்

  மலையின் உச்சியில் இருக்கும் கோவில் என்றாலே! அது பெருஞ் சிறப்புக்குரியதாகவே

  இருக்கும். காரணம்அவ்வ‍ளவு உயரத்தில், எந்தவித மான தொழில் நுட்பமும் இல்லாத  அக்காலத்தில் கட்டுமான பொருட்களை எப்ப‍டி அங்கு கொண்டு சென்று கட்டினார்கள் என்பதே வியப்புக்கும், சீரிய‌ பக்திக்கும்காரணமாக அமைகின்ற ன•

  அந்த வகையில்  926 படிகள் கொண்ட மலைமீது ஏறி முருகனை தரிசித்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் கடையத்து மருமகனான மகாகவி பாரதி யார் கடையத்தில் வாழ்ந்திருந்த‌போது, தோரணமலை முருகனை ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடி பரவசம் அடைந்தார்.

  இந்த தோரணமலை முருகன் கோவில் நெல்லை மாவட்டம், கடையம் தென்காசி சாலையில் இயற் கை எழிலுடன் அமைந்துள்ளது. இந்த‌ தோரண மலைக்கு தென்புறம் மலையில் இருந்து ராமநதியு ம், மலையின் வடபுறம் ஜம்பு நதியும் தவழ்ந்து எழில் கொஞ்சும் இடமாக தோரணமலை கம்பீர மாக காட்சியளிக்கிறது.

  அபூர்வ மூலிகைகளுடன், பக்தி மணம் கமழும் தோரண மலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நோய் தீர்க்கும் அரும்பெரும் சுனையாகும். பத்திரகாளி அம்மனுக்கு இங்கே தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

  NO COMMENTS

  LEAVE A REPLY