உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது

  0
  125

  சூரிய ஒளி

  காலை சூரியஒளி படுமாறு சூர்ய வணக்கம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளியின் அனுக்கள் நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்கள் செய்யும்.

  நல்ல சுவாசம்

  நல்ல சீரான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் பிரணாயமம் செய்யுங்கள்.

  நீர்சத்து

  உணவு அருந்தியபின் நீர் அருந்தவும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் பருகுங்கள்.

  உடல் பயிற்சி

  முடிந்த அளவு உங்களுக்குத் தெரிந்த சாதரண பயிற்சிகளைச் செய்யுங்கள். அதிக

  ஆரோக்கிய உணவு

  உணவு என்ற உடன் சிலருக்கு சுவை நினைவிற்கு வரும்.சுவைக்காக உணவருந்தாதீர். தேவைக்காக அருந்துங்கள். “அற்றல் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடுதுய்குமாறு” என்பதற்கேற்ப அளவறிந்து தேவைக்கேற்ப தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அப்போது நோயும் மருந்தும் தேவையில்லை.  சராசரியாக ஒரு குழைந்தைக்கு ஒருநாளைக்கு 2000 கலோரிகளும், இளைஞர்களுக்கு 3500 கலோரிகளும் முழுவளர்ச்சி அடைந்தவர்களுக்கு 3000 கலோரிகளும் தேவைப்படும்.

  ஆழ்ந்த உறக்கம்

  நல்ல ஆரோக்கிய உடல் உள்ளவர்களுக்கு, உழைப்பவர்களுக்கு நல்ல உறக்கம் இயற்கையாகவே கிடைக்கும்.

  சராசரியான எடை

  ஒவ்வொருவரும் தங்கள் உயரத்திற்கு வயதிற்கு ஏற்ப இவ்வளவு எடை இருக்கவேண்டும் என கணக்கிட்டுள்ளார்கள்.

  நாம் எல்லோரும் நம் உடலுக்கு என முன்னெச்சரிக்கையாக எதுவும் செய்வதில்லை. உடலின் பாகங்கள் தாக்கப்பட்டு செயல் குறையும் போதுதான் அதப்பற்றி கவலைப்பட்டு கவனம் செலுத்துகின்றோம். சிலசமயம் அது காலம் தாழ்த்திய செயாலகிவிடுகின்றது. இந்த புனித உடல் உலக இன்பத்தை ஆரோக்கியமாக அனுபவிப்பதற்காக கிடைத்தது. அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் அந்த எண்ணங்கள்தான் நமக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும்.

  NO COMMENTS

  LEAVE A REPLY