கீமா இட்லி

0
151

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – கால் கிலோ,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1

தக்காளி – 2

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – அரை டீஸ்பூன்

சீரகத் தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

ஆம்சூர் தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க

செய்முறை:

முதலில் இட்லிகளைத் தயாரித்து, ஆற வைக்கவும். இட்லிகள் ஆறியதும் எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அடுப்பை மூட்டி மெல்லிய தீ வைத்து கடாயில் சிறிது எண்ணெயைச் விட்டு சூடாக்கி கொள்ளவும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின் மிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள், ஆம்சூர், ஆகிய எல்லா தூள்களையும் முறையே சேர்த்து கிளறிவிடவும். பின் அளவாக உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் அளவில் பச்சை வாசம் போகும் வரை வேக விடவும். பின் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை கடாயில் போட்டு கிளறி, இறக்கவும். சுவையான கீமா இட்லி தயார்…!!! –

NO COMMENTS

LEAVE A REPLY