ஸ்நாக்ஸ் மொரு மொருனு இருக்க

0
212

எந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்தாலும் அது கொஞ்சம் மொரு மொருப்பு இருந்தால் தான் சுவை அதிகமாக இருக்கும்

அதுக்கு சின்ன யோசனை

மொரு மொருப்புக்கு அரிசி மாவு அல்லது கான்பிளவர் மாவு சேர்த்து பொறித்தால் மொரு மொருப்பு கிடைக்கும்।

  • சமோசா மற்றும் சோமாஸ் செய்யும் பொழுது மொரு மொருனு வர மாவு குழைக்கும் முன்பே அதில் கொஞ்சம் உப்பு, சோடாமாவு, சூடு செய்த பட்டர் அல்லது நெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசையவும்.. இதனை போல் செய்தால் நல்ல கிரிஸ்பியான சோமாஸ், சமோசா ரெடி

  • சில வீடுகளில் வேலை முடிந்தால் போதும் என்று சமையல் வேலை முடிந்த உடனே அப்பளம் பொரித்து வைத்து விடுவாங்க.. அப்பறம் நாம் சாப்பிட உட்காரும் பொழுது அப்பளம் நமத்து போய்யிருக்கும்.. அதனை தடுக்க அப்பளம் பொறித்த உடனே ஒரு பெரிய சிலவர் டப்பாவில் போட்டு மூடி போட்டு வைக்கவும். அல்லது ஒரு பாலித்தின் கவரில் போட்டு பிரிஜில் வைத்து விட்டு சாப்பிடும் பொழுது எடுத்தால் மொரு மொருனு அப்பளம் இருக்கும்

  • கட்லெட் வகைகள் செய்ய காய்கறிகள், கறி வகைகள் சமைக்கும் பொழுது அதிக தண்ணீர் சேர்க்காமல் குறைந்த தணலில் வேக விடவும். அப்ப தான் உணவில் காரம்,உப்பு,புளிப்பு சேரும். சுவையும் கூடும். பிறகு நாம் கட்லெட் செய்யும் பொழுது ஈரபதம் இல்லாமல் வரும்.
  • வெஜ் அல்லது நான் – வெஜ் சமைக்கும் பொழுது நன்றாக மசாலா கலந்து நன்றாக ஊறிய பின்பு பிரட் தூள் அல்லது ரஸ்க் தூள் போட்டு விரவி சமைக்கவும்.
  • எண்ணெய் நன்றாக காய்ந்த பின்பு பிரட்டி வைத்த பொருட்களை போடவும்।
  • முதலில் அதிக தணலிலும் பிறகு நிதானமாக அடுப்பை எரியவிடவும்।
  • தீயினை அதிகமாக எரியவிட்டால் வறுவல் தீஞ்ச வாடை வந்துவிடும்। அவசரமில்லாமல் நிதானமாக சமைக்கவும்.

  • எந்த உணவாக இருந்தாலும் மிகவும் நிதானமாக பொறியவிடவும்।
  • எந்த ஒரு சமையல் செய்தாலும் முழு கவனம் சமையல் மீது மட்டுமே இருக்கட்டும்। அப்பதான் நாம் சுவையாக சமைத்து நல்ல பெயர் வாங்க முடியும்।

NO COMMENTS

LEAVE A REPLY