ஆப்பிள் ரீங் ரோல்

0
88

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 3-4

மைதா – 1 கிண்ணம்

சர்க்கரை – 2 தேக்கரண்டி

ஏலம் தூள் – 1/4 தேக்கரண்டி

பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி

உப்பு – 1/4 தேக்கரண்டி

முட்டை – 1

எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

பொடித்த சர்க்கரை – 1/2 கிண்ணம்

 செய்முறை:

ஆப்பிளை வட்ட துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே உள்ள பகுதியையும் வட்டமாக நீக்கி வளையங்களாக்கிக் கொள்ளவும். அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து, அதில் உள்ள அதிகப்படியான ஈரத்தன்மையை நீக்க வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து மற்றொரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து, பின்னர் அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை மாவுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஆப்பிள் துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து  எடுக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலம் தூளை சேர்த்து கலந்து, அந்த கலவையில் பொரித்து வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளைப் பிரட்டி எடுத்தால், ஆப்பிள் ரிங் ரோல் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY