முட்டை பணியாரம்

0
195

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – ஒரு கிண்ணம்

முட்டை – 2

சின்ன வெங்காயம் – 6

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

கடுகு – கால் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.

பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.   வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.  பின்னர் தாளித்த பொருட்களை முட்டை இட்லிமாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்துக்  கொள்ளவும்.

அதன்பின்னர், குழிப்பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக் கல்லில் முக்கால் பாகம் அளவிற்கு ஊற்றவும். பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான முட்டை பணியாரம் தயார்.

NO COMMENTS

LEAVE A REPLY