பனீர் வெஜ் மின்ட் கறி

0
106

தேவையானவை

 • வதக்கி அரைக்க:
 • புதினா – ஒரு கட்டு
 • கொத்தமல்லி – அரை கட்டு
 • கறிவேப்பிலை – கால் கட்டு
 • பச்சை மிளகாய் – நான்கு
 • இஞ்சி – ஒரு எலுமிச்சை அளவு
 • பூண்டு – 5 பல்
 • வெங்காயம் – மூன்று
 • தக்காளி – நான்கு
 • உப்பு – ஒரு தேக்கரண்டி
 • எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
 • வேக வைக்க:
 • மிக்ஸ்ட் வெஜிடேபுள்ஸ் – 300 கிராம்
 • உப்பு – அரை தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
 • பனீர் – 200 கிராம்
 • தாளிக்க:
 • எண்ணெய் + பட்டர் – ஒரு மேசைக்கரண்டி
 • சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் காய்களை குக்கரில் அல்லது மைக்ரோவேவில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.அதில் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்க விடவும். அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பனீர் நன்கு வேக, கடாயை தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.

இப்பொழுது வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் காய்களை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான ஆரோக்கியம் நிறைந்த பனீர் மின்ட் கறி ரெடி. இதனை சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY