வெஜிடேபிள் சமோசா

0
147

தேவையானவை

கோதுமை மாவு – அரை கிலோ
முட்டைகோஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பட்டாணி – 50 கிராம்
பட்டை – 1
இலவங்கம் – 2
மஞ்சள்தூள் – அரைத்தேக்கரண்டி
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
புதினா – ஒரு கட்டு
பச்சைமிளகாய் – 8
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

புதினா, பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட் மற்றும் உருளைகிழங்கினையும் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவை நன்கு சலித்துக் கொண்டு, அதனுடன் சிறிது உப்பு, எண்ணெய் அரைத்த விழுது சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
முப்பது நிமிடம் ஆன பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போட்டுக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், வேக வைத்த காய்கறிகள், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு நேர்த்து மசாலா செய்து கொள்ளவும்.
சப்பாத்தியின் நடுவில் இந்த கலவையை வைத்து, இரண்டு புறமும் சிறிது நீரை தொட்டு ஒட்டி விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சமோசாவைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY