வடசென்னை குடிசைவாழ் பெண்ணாக சமந்தா!

0
427

வெற்றிமாறனின் வடசென்னை வருமா வராதா என்று ஒருபுறம் பட்டிமன்றம் நடக்கிறது. தனுஷ் தொடர்ச்சியாக புதுப்படங்களில் கமிட்டாகிறார். வடசென்னை வருமா சென்னை ஆகியிருக்கும் நிலையில், சமந்தா அளித்திருக்கும் பேட்டி, பெரும் ஆறுதல்.

வடசென்னை படத்தில் எனக்கு சவாலான கதாபாத்திரம். அதற்காக சென்னையின் குடிசைப்பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கையை கவனிக்கப் போகிறேன் என சமந்தா கூறியுள்ளார்.

வடசென்னையில் குடிசைவாழ் பெண்ணாக சமந்தா நடிக்க உள்ளார். அதற்காகத்தான் சென்னையின் குடிசைப்பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் வாழ்க்கையை அவதானிக்க திட்டமிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பேட்டி, வடசென்னை கைவிடப்படவில்லை, விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY