முட்டை பப்ஸ்

0
175

தேவையானவை

 • மைதா மாவு – கால் கிலோ
 • நெய் – ஒரு மேசைக்கரண்டி
 • எலுமிச்சைரசம் – ஒரு தேக்கரண்டி
 • உப்புத்தூள் – அரை தேக்கரண்டி
 • தண்ணீர் – அரைக்கோப்பை
 • நெய் – நூறு கிராம்
 • முட்டை – ஆறு
 • வெங்காயம் – ஒன்று
 • பச்சைமிளகாய் – ஒன்று
 • கரம்மசாலா – ஒரு தேக்கரண்டி
 • மிளகாய்தூள் – கால் தேக்கரண்டி
 • நறுக்கிய கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி
 • உப்புத்தூள் – ஒரு சிட்டிகை

 செய்முறை

 • மைதா மாவுடன் உப்பையும், நெய்யையும் சேர்த்து கைகளால் நன்கு பிசிறவும். பிறகு எலுமிச்சைரசத்தை சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
 • பிறகு வெளியில் எடுத்து ரொட்டி கட்டையால் தேய்க்கவும். பிறகு நெய்யில் மூன்றில் ஒரு பாகத்தை இதில் தடவி நான்காக மடித்து அதி குளிர்சாதன பெட்டியில் பத்து நிமிடம் வைக்கவும்.
 • இதேப்போல் மீண்டும் செய்து வைக்கவும். மூன்றாவது முறையாக ரொட்டியை தேய்த்து நெய்யை தடவி மடித்து உள்ளே வைக்காமல் மீண்டு ஒரு முறை சமமாக தேய்த்து செவ்வகங்களாக துண்டுகள் போடவும்.
 • முட்டைகளில் ஐந்து முட்டைகளை வேகவைத்து தோலை உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
 • பிறகு முட்டையின் மஞ்சள்கருக்களை மட்டும் தனியே எடுத்து உதிர்த்து வைக்கவும்.
 • ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி நொறுங்க நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். பிறகு மிளகாய்தூள், கரம்மசாலா, உப்புத்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி உதிர்த்து வைத்துள்ள மஞ்சள்கருக்களை போட்டு நன்கு கலக்கி இறக்கி வைக்கவும். இதனை நறுக்கி வைத்துள்ள முட்டையின் வெற்றிடத்தில் வைத்து நிரப்பவும்.
 • பிறகு பப்ஸ் துண்டுகளில் முட்டை துண்டினை ஒரு புறம் வைத்து மறு புறத்தை மூடவும்.
 • மீதியுள்ள ஒரு முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் நன்கு கலக்கி தயாரித்து வைத்துள்ள பப்ஸ்களின் மீது தடவவும்.
 • பிறகு அவனில் வைக்ககூடிய தட்டில் பப்ஸ்ஸை பரப்பி வைத்து அவனை 400 டிகிரி Fல் சூடாக்கி அரைமணி நேரம் வைக்கவும். பிறகு அவனின் வெப்பத்தை பாதியாக குறைத்து வைத்து பத்து நிமிடம் வைத்திருக்கவும். பப்ஸ் நன்கு வெந்து பொன்னிறமாக ஆனவுடன் வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY