த்ரிஷாவின் பயம்

0
127
நடிக்க வந்து 15 வருடங்களாகிறதே, பயம் போய்விட்டதா என்றால், இன்றைக்கும் நடனக் காட்சி என்றால் பயமாகத்தான் இருக்கிறது என்கிறார் த்ரிஷா. அவர் நடிக்க பயப்படும் இன்னொரு விஷயம், காமெடி.
அனைத்துவிதமான வேடங்களிலும் நடித்த த்ரிஷா இதுவரை காமெடி வேடத்தில் மட்டும் நடித்ததில்லை. முதல்முறையாக தமிழ், தெலுங்கில் தயாராகும், நாயகி படத்தில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இதுவொரு ஹாரர் காமெடி படம்.
“காமெடி பார்க்க எளிதாக இருந்தாலும் நடிப்பது கஷ்டம். நாயகியில் பயந்து கொண்டேதான் நடித்தேன். என்னுடைய காமெடி ஸ்பாட்டில் இருந்தவர்களுக்கு பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்குமா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
நீங்க எது செய்தாலும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY