ஈரல் வறுவல்

0
154

தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் -1/4கிலோ
பெரியவெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன்
தக்காளி -1
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
கறிமசலாதூள் 2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணய் -2ஸ்பூன்

செய்முறை:

ஈரலை சுத்தம்செய்து சிறி தாக நறுக்கிவைக்கவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும்.

மிளகாயை இரண்டாக நறுக் கி வைக்கவும்.

வாணலியில் எண்ணய் ஊற்றி வெங்காயம்,மிளகாய் போட்டுவதக்கி,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக் கவும்.

தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் ஈரலைபோட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.

மஞ்சள்தூள்,கறிமசால்தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும்.

சுவையான ஈரல் வறுவல் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY