சொந்த கிராமத்தை தத்தெடுத்த மகேஷ்பாபு

0
134
மகேஷ்பாபு சமீபத்தில் வெளிவந்த தன்னுடைய படத்தில் சொந்த கிராமத்தை தத்தெடுக்கும் கோடீஸ்வரராக நடித்திருந்தார். படம் ஹிட்டாகவே, தனது சொந்த கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தார்.

இதேபோல் தத்தெடுப்பதாக கூறும் நடிகர்கள் அந்த கிராமத்தை தத்தளிக்கத்தான் விட்டிருக்கிறார்கள். மகேஷ்பாபு அப்படியல்ல.

அவர் தத்தெடுத்த தனது சொந்த கிராமமான புர்ரிபள்ளத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வளர்ச்சி பணிகளுக்காக கொடுத்துள்ளார். புர்ரிபள்ளத்தை மாடல் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே அவரது லட்சியமாம். இந்த ஒரு கோடி ஒரு தொடக்கப்புள்ளிதான், தொடர்ந்து அந்த கிராமத்துக்கு தேவைப்படும் விஷயங்களை செய்துத்தர இருக்கிறாராம்.

அரசியல்வாதிகள் அனைவரும், சொன்னதை செய்வோம் என்கிறார்கள். அதனை சொல்லாமலே செய்து காட்டியுள்ளார் மகேஷ்பாபு.

NO COMMENTS

LEAVE A REPLY