ராணா படத்திற்கு இசையமைக்கும் யுவன்

0
103

‘பாகுபலி’, ‘பெங்களூர் நாட்கள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் என இருமொழிகளிலும் உருவாகும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ராணா டகுபதி. ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், ராணா டகுபதியை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அதேநேரத்தில், தெலுங்கிலும் இவருக்கென்று தனி மவுசு இருப்பதால், இரு மொழிகளில் உருவாகும் படங்கள் என்றால், முதல் நபராக ராணாவைத்தான் அனைவரும் தேர்வு செய்கின்றனர். ராணா டகுபதி நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தை எஸ்.என்.ராஜராஜன் என்பவர் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ‘கழுகு’, ‘சவாலே சமாளி’ ஆகிய படங்களை இயக்கிய சத்ய சிவா இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ராணாவுக்கு யார் கதாநாயகி, மேலும் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY