ரசகுல்லா

0
188

தேவையான பொருட்கள்:

  • பால் – 1/2 லிட்டர்
  • எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 மற்றும் 3/4 கப்
  • ஐஸ் கட்டிகள் – 4-5
  • சர்க்கரை – 3/4 கப்
  • ஏலக்காய் பொடி – 1
  • சிட்டிகை பிஸ்தா – 3-4

செய்முறை:

  • முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  • பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.
  • ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மஸ்லின் துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, ஓடும் நீரில் மஸ்லின் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.
  • பின் அதில் உள்ள நீரை வடித்து, 30 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். பின்பு மஸ்லின் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை பிசைய வேண்டும்.
  • சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை போட்டு, குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்கவும்.
  • பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்
  • இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி!!!

NO COMMENTS

LEAVE A REPLY