கேரள மீன் ஃப்ரை

0
133

தேவையானவை

வஞ்சரம் மீன் – 4 துண்டு
தேங்காய் எண்ணெய் – 5 தேக்கரண்டி

ஊற வைக்க…

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி

மசாலாவிற்கு…

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மீன்னை ஊற வைக்க வேண்டும். பின் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மல்லி தூள், மிளகு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

இந்த மசாலாவை மீனின் மேலே தடவி, தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை அவற்றில் போட்டு வறுக்கவும். ஒரு பக்கம் வெந்த பின் மறுபக்கம் திருப்பி போட்டு வறுக்கவும். சுவையான கேரள மீன் ஃப்ரை தயார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY