பனீர் டிக்கா

0
133

 தேவையான பொருட்கள்

பனீர் துண்டுகள் – 200 கிராம்
குடமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பனீர் டிக்கா

செய்முறை

பனீர், வெங்காயம், குடமிளகாய், தக்காளி முதலியவற்றை 11/2 இன்ச் சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து பனீரில் பூசி அரைமணி நேரம் ஊற விடவும்.

ஒரு குச்சியில் பனீர், தக்காளி, வெங்காயம், குடமிளகாய் முதலியவற்றைக் குத்தி தந்தூரி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.

அல்லது ஒரு ட்ரேயில் பரப்பி பேக்கிங் அவனில் 15 நிமிடம் பேக் செய்யவும். (பனீருக்கு பதில் சிக்கனை சேர்த்தால் சிக்கன் டிக்கா ஆகும்)

NO COMMENTS

LEAVE A REPLY