முட்டையில்லாத ப்ளாக் பாரெஸ்ட் கேக்

0
135

தேவையான பொருட்கள்:

மில்க் மெய்ட் – 1 டின்
சூடான பால் – 1/2 கப்
பட்டர் – 100 கிராம்
சீனி – 60 கிராம்
வெனிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
கோதுமை மா – 250 கிராம்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
சமையல் சோடா – 1 தேக்கரண்டி
கொக்கோ பவுடர் – 4 தேக்கரண்டி

அலங்கரிக்க:

ப்ரெஷ் க்ரீம் – 1/2 கிலோ,
சொக்லெட் துண்டு – 50 கிராம்,
செர்ரி பழம் – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் பட்டர், சீனி மற்றும் மில்க் மெய்ட், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் முறையே இட்டு நன்றாக சீனி கரைந்து நுரைத்து வரும் வரையும் அடிக்கவும்.

பின்னர் தனியே ஒரு தட்டில் கோதுமை மா, பேக்கிங் பவுடர், கொக்கோ ஆகியவற்றை கொடுத்துள்ள அளவின் படி சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும். முதலில் நுரைபொங்க அடித்து வைத்துள்ள கலவையில் சலித்து வைத்துள்ள கோதுமை கொக்கோ, பேக்கிங் பவுடர், கலவையைச் சேர்க்கவும்.

அத்துடன் சூடான பால் ஊற்றி தோசை மாவு பதத்துக்குக் கலந்து வைத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு பேக்கிங் டிரேயில் வைத்து 180°C வெப்பத்தில் பேக் செய்யவும். பிறகு சொக்லெட் கேக்கை வெளியே எடுத்து வைத்து ஆற வைக்கவும்.

பாத்திரமொன்றில் ப்ரெஷ் க்ரீமை நன்றாக நுரைக்க அடித்து வைக்கவும். இப்போது சொக்லெட் கேக்கை கத்தியால் நீண்ட துண்டுகளாக வெட்டி அடித்த ப்ரெஷ் க்ரீமில் சிறிதளவு எடுத்து கேக் மேல் தடவவும்.

பின் சொக்லெட் பாரைத் துருவி அதன் மேல் இன்னொரு கேக் துண்டை வைத்து, மீண்டும் க்ரீம் தடவி சொக்லேட் பார் வைத்து நிரப்பவும். இப்படி மூன்று முறை செய்தபின் கடைசியில் நான்கு புறமும் க்ரீம் தடவி சொக்லெட் துருவலைத் தூவி, பொடியாக நறுக்கிய செர்ரி பழங்களையும் தூவி அலங்கரித்து சுமார் 4 மணி நேரம் அதிகுளிர்சாதனத்தில் வைத்துப் பரிமாறவும்.

 

NO COMMENTS

LEAVE A REPLY