ரைஸ் டிக்கியா

0
119

தேவையானவை

காலிஃபிளவர் (துருவியது) – ஒரு கப்

சாதம் – கால் கப்

சோள மாவு – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள், தனியாத் தூள்,

மஞ்சள் தூள்,

சாட் மசாலாத் தூள் – தலா 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

மல்லி, புதினா இலை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வடித்த சாதம் போட்டு அதனுடன் மற்றப் பொருட்கள் அனைத்தையும் போட்டு தேவையெனில் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளுங்கள்.

பிசைந்த கலவையை ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து கட்லட் போல் தட்டி, அடி கனமான தோசைக் கல்லில் போடுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.

நன்றாக வெந்து பொன்னிறமானதும் சாஸ், சட்னியுடன் பரிமாறுங்கள். நன்றாகத் திருப்பிப்போட்டு வேக விடுங்கள், இல்லையென்றால் உள்ளே வேகாது.

NO COMMENTS

LEAVE A REPLY