செட்டி நாட்டு சீப்பு சீடை

0
196

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 4 கப்

பொட்டுக்கடலை – 1 கப்

தேங்காய் – 1 முழுதாக

உப்பு – 3 டீஸ்பூன்

எண்ணெய் – 350 கிராம்

செய்முறை

பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டியில் இட்டு பின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். வெறும் கடாயில் போ இட்டு மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையையும் பொடித்துச் சலிக்கவும்.

தேங்காயைத் துருவி அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சூடாகும்போது உப்பு போட்டு இறக்கவும். திரிந்தது போல் இருக்கும். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது அரிசி., பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும்.

சீப்புச்சீடைக்கட்டையில் உருண்டையாக் உருட்டி இட்டு மாவைப் பேப்பரில் பிழியவும். அதை 3 இன்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும். சூடாக மாலைப் பலகாரமாகப் பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY