வாக்களித்த நடிகை திரிஷா

0
159

சென்னையில் இன்று வாக்களித்த நடிகை திரிஷா, தனது கடமையை நிறைவேற்றியிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகை திரிஷா கோட்டூர்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் வெளியே வந்த அவர், தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY