ஸ்பெஷல் தயிர் வடை

0
129
தேவையானவை: 
முழு வெள்ளை உளுந்து – ஒரு கப்,
கெட்டித் தயிர் – 2 கப்,
பால் – அரை கப்,
பச்சை மிளகாய் – 2,
பாதாம், முந்திரி – தலா 8,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
 உளுந்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும். தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து… பால், சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதை பால் – தயிர் கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி – தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY