ஆட்டு மூளை வறுவல்

0
541

தேவையானவை

  • மூளை – ஒன்று
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
  • கடுகு சீரகம் – அரை தேக்கரண்டி
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – நான்கு எண்ணிக்கை
  • உப்புத்தூள் – கால் தேக்கரண்டி
  • எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை 

ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, சீரகம், சோம்பை போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.

* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY