பாதாம் ஷீரா

0
118

தேவையான பொருட்கள்:

பாதாம் 1 கப்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/2 லிட்டர்
நெய் – 100 கிராம்
சர்க்கரை – 200 கிராம்

செய்முறை:

பாதாம், கசகசாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

மறுநாள், பாதாம், கசகசாவை மிக்ஸியில் மைய அரைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பாதாம் விழுதைப் போட்டு குறைந்த தீயில் கிளறவும்.

லேசான பொன்னிறம் வரும்போது பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

ஏலப்பொடி சேர்க்கவும். சிறிதளவு, முந்திரி, பாதாம் மெல்லியதாக சீவி மேலாக அலங்கரிக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY