செட்டிநாடு வெஜ் புலாவ்

0
147
தேவையானவை 
பாஸ்மதி -2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் -1 கைப்பிடி
காய்கள் -1 1/2 கப் [ இதில் நான் கேரட்,பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்திருக்கேன்]
எலுமிச்சை சாறு -1 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் -2 கப்
நீர் -1 கப்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
அரைக்க
பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் -1
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -2
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் -5
சோம்பு -1 டீஸ்பூன்
தாளிக்க
பட்டை -1 துண்டு
பிரிஞ்சி இலை -2
ஏலக்காய் 3
கிராம்பு -3
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
அரிசியை கழுவி நீரை வடித்து 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை ,பிரிஞ்சி இலை,ஏலக்காய் ,கிராம்பு போட்டு
தாளித்து வெங்காயம்,அரைத்த விழுது(பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய்,

பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு ,இஞ்சி ,பூண்டுப்பல்,சோம்பு )

,புதினா இலை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

பின் காய்கள் ,உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி தேங்காய்ப்பால்,தண்ணீர்,

மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவுலம்.தண்ணீர் அளவு அரிசியைப் பொறுத்து சிறிது மாறுபடலாம்.

கொதித்ததும் எலுமிச்சை சாறு,அரிசியை சேர்த்து மீடியம்  நெருப்பில் 2 அல்லது  3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
அல்லது 
இங்கு நான் தம் சேர்த்து செய்துள்ளேன்.அரிசியை சேர்த்ததும் நீர் வற்றிய பிறகு தோசைகல்லை காயவைத்து அதன்மேல் குக்கர் வைத்து சிறுதீயில் 15- 20 நிமிடம் வரை தம் போடவும்.
அல்லது
190 முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் வைத்தும் எடுக்கலாம்.
வெந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ரைய்த்தா அல்லது குருமாவுடன் பரிமாறவும்.
பின்குறிப்பு
1 கப் அரிசிக்கு  1 1/2 கப் நீர் என  2 கப்பிற்கு 3 கப் நீர்  சேர்த்து செய்துள்ளேன்.
புலாவ் வெள்ளையாக வேண்டுமெனில் மஞ்சள்தூள் சேர்க்காமல் செய்யலாம்.
எலுமிச்சை சாறுக்கு பதில்  1/2 கப் தயிர் சேர்க்கலாம்.
காய்கள் அதிகம் சேர்த்தாலும் புலாவ் சுவை மாறிவிடும்.

NO COMMENTS

LEAVE A REPLY